வடமேற்கு சீனாவில் செயல்பட்டு வந்த டயர் உற்பத்தி தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் 6வது தளத்தில் பற்றிய தீ, கட்டடம் முழுவதும் பரவியது. அதிகளவில் கரும்புகை வெளியேறியதால், அப்பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டடத்தை சுற்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், 200 டன் டயர்கள் எரிந்து சேதமடைந்தன.தொழிற்சாலையில் ஊழியர்கள் யாரும் இல்லாதபோது, விபத்து நிகழ்ந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Discussion about this post