சீன இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 14 லட்சம் கோடி அளவுக்கு வரி விதிக்கப்பட்டு இருப்பதால், சீனா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக வரி விதித்தது.
இந்த நிலையில், மேலும் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். செப்டம்பர் 24 -ஆம் தேதி முதல் கூடுதல் வரி விதிப்பு 10 சதவீதமாகவும், ஜனவரியில் இருந்து 25 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
சீனா நியாயமற்ற வர்த்தகத்தை தொடர்ந்து பின்பற்றுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்ததால், 3வது கட்டமாக வரியை கூட்டுவோம் என்று டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
Discussion about this post