தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த, சில்க் ஸ்மிதாவின் கடைசிப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 1980களில், கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் தன் சொந்த வாழ்க்கையில், ஏற்பட்ட மனவுளைச்சல் காரணமாக, கடந்த 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்னதாக கடந்த 1995 ஆம் ஆண்டு கடைசியாக நடித்த படம் “ராக தாளங்கள்”.
இந்தப் படத்தை இயக்குநர் திருப்பதி ராஜன் இயக்கியிருந்தார். சாதி பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாகக் கூறி சென்சார் குழுவால் நிராகரிக்கப்பட்டு, திரைக்கு வராமலேயே முடங்கிக்கிடந்தது. இந்நிலையில், தற்போது, இந்தத் திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டு, வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்குத் தகுந்தார்போல், இந்தப் படத்தில் இயக்குநர் திருப்பதி ராஜன், சில புதிய மாற்றங்களைச் செய்து, பல புதிய காட்சிகளையும் சேர்த்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால், வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post