கஜகஸ்தானில் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டாயிரம் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க அந்த நாட்டு அரசு அதிரடி முடிவு மேற்கொண்டுள்ளது.
கஜகஸ்தான் நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த 2010 முதல் 2014 வரை மட்டும் சுமார் ஆயிரம் சிறுவர்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டும் குற்றங்கள் குறையவில்லை. இதையடுத்து அந்த நாட்டு அரசு குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க முடிவு செய்துள்ளது.
சைப்ரொடெரோன் (Cyproterone) என்ற மருந்தையே இதற்கென்று பயன்படுத்த உள்ளனர். இதனால் அறுவைசிகிச்சை ஏதும் மேற்கொள்ள தேவையில்லை சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டு சிறுவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபர் ஒருவருக்கு முதன் முறையாக ஆண்மை நீக்கம் செய்யப்பட உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Discussion about this post