சார்லி சாப்ளின் 2 – டிரெண்டாகும் பாடல் காட்சி

”சார்லி சாப்ளின்- 2” பாகம் படத்தின் ‘சின்ன மச்சான்’ பாடல் காட்சியின் சூட்டிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவாகும் காட்சிகள் யூ டியூப்பில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

”சார்லின் சாப்ளின்- 2” படத்திற்கான சூட்டிங் பிஸியாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து உள்ளார். இந்தப் படத்தில், ‘சின்ன மச்சான்’ பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி பாடி அசத்தியுள்ளனர். பாடலுக்கான சூட்டிங்கும் நடைபெற்று வருகிறது. இதனை படக்குழுவினர் யூ டியூபில் வெளியிட்டுள்ளனர். கிராமத்து மண்வாசனை கலந்த இந்தப் பாடல் வைரலாகி வருகிறது.

Exit mobile version