வேதிப் பொருட்களின் சேர்க்கை முறையாக பின்பற்றப்படாத காரணத்தால், 328 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வலிநிவாரணியான சாரிடான், அழகு க்ரீம் பாண்டர்ம் உள்ளிட்ட 328 மருந்து பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் வேதிப்பொருட்களின் சேர்க்கை கூடுதலாகவோ, குறைவாகவோ இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த மருத்துகளின் மீது மத்திய அரசின் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக்குழு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் முடிவில் ரசாயனப் பொருட்களின் சேர்க்கை முன்னுக்கு பின் முரணாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 328 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்து.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து க்ளென்மார்க், ஃபைசர் உள்ளிட்ட மருந்து நிறுவனங்கள் 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடினர். மத்திய அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றமும் இடைக்கால தடை விதித்து. ஆனால், இறுதிக்கட்ட விசாரணையில், பொதுமக்கள் நலன் கருதி, 328 மருந்துகளுக்கான தடையை உச்சநீதீமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்த மருந்துகளை இந்தியாவில் இனி உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ முடியாது.
Discussion about this post