தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வட சென்னை சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வட சென்னை. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ராதாரவி, கருணாஸ் உட்பட பலர் நடித்து வரும் இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது. மூன்று பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாக பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான இபடத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சீனாவில் நடைபெற உள்ள பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட வட சென்னை படம் தேர்வாகியுள்ளது. வரும் 17 ஆம் தேதி சரஸ்வதி பூஜையன்று வட சென்னை படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.