சர்வதேச திரைப்படவிழாவில் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம்

நடிகர் தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் திரைப்படமான “தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்”, நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, விருது பெற்றுள்ளது. இதனை அப்படத்தின் இயக்குனர் கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

“தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்” என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரையுலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த திரைப்படமானது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version