சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை வரியாக வசூலாகிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. அதன்படி, ஆகஸ்டு மாத சரக்கு மற்றும் சேவை வரியாக 93 ஆயிரத்து 960 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 96 ஆயிரத்து 483 கோடி ரூபாய் கிடைத்து இருந்தது. கடந்த மாதத்தை ஒப்பிடும் போது இந்த மாதம் 2 ஆயிரத்து 523 கோடி ரூபாய் குறைவாக வசூலாகி உள்ளது.
Discussion about this post