சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், சாமான்ய மக்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரித்து, 83 ரூபாய் 54 காசுகளுக்கும், டீசல் விலை 11 காசுகள் உயர்ந்து, 76 ரூபாய் 54 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்களை பாதித்துள்ளதால், சரக்கு கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Discussion about this post