சபரிமலைக்கு வரும் பெண்களுக்காக நிலக்கல்லில் பத்தாயிரம் பேர் தங்குவதற்கான விடுதி கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கேரள அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேரள அதிகாரிகள் ஆய்வு செய்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள பொதுப் பணித்துறை செயலாளர் கமலவரதன், பம்பையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலக்கல் எனும் இடத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்படுள்ளதாக தெரிவித்தார். கேரள உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு நிலக்கல்லில் 10 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள் கட்டப்பட உள்ளதாக அவர் கூறினார். ஆயிரம் காவலர்கள், தீ அணைப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்குவதற்கான விடுதிகளின் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருவதாக கமலவரதன் தெரிவித்துள்ளார். கேரள அரசு இவ்வளவு வேகமாக பணிகளை செய்தாலும், பெண்கள் சபரி மலை வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Discussion about this post