சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி!  உச்ச நீதிமன்றம் அதிரடி!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, பெண்களில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கில், கேரளாவில் முன்பு ஆட்சியில் இருந்து காங்கிரஸ் அரசு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது ஆட்சிப்பொறுப்பில் உள்ள இடதுசாரி அரசு பருவம் எய்திய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிப்பதாக கூறியது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.

சபரிமலை கோயிலில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக கூறிய 4 நீதிபதிகள், ஆண்களுக்கு பெண்கள் சமமானவர்கள் என்று கூறினர்.

வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது என்றும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர். தீபக் மிஸ்ராவுடன், கன்வில்கர் இணைந்து அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அறிவித்தனர். 

Exit mobile version