சட்டக் கல்லூரியில் நடந்த ராகிங்கில் இரு பிரிவாக மாணவர்கள் மோதிக் கொண்டார்கள் . இதில் ஒரு மாணவனின் தொள்பட்டையில் முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் மோதல் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிங்கார வேலன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு 2ஆம் ஆண்டு மாணவனும் ராகிங் கொடுமைக்கு ஆளாகியுள்ளான். தனுஷ் என்ற இரண்டாம் ஆண்டு மாணவனை 3 ஆம் ஆண்டு மாணவர்கள் சிறுநீரை குடிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். மற்றொரு மாணவனை பரீட்சை எழுத விடாமலும் தடுத்துள்ளனர். இதுகுறித்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, உரிய விளக்கும் அளிக்குமாறு துணை வேந்தருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post