திருச்சி திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் அகோரி ஒருவர், தனது தாயாரின் சடலத்தின் மீது அமர்ந்து பூஜைகள் செய்து இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தது அப்பகுதியினரிடையே ஆச்சரியத்தையும், திகிலையும் ஏற்படுத்தியுள்ளது.
அரியமங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது.
காசியில் அகோரி பயிற்சி பெற்ற திருச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.
இங்கு விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள், உள்ளிட்டவைகள் நடக்கும்.
இந்நிலையில் நேற்று அகோரி மணிகண்டனின் தாயார் மேரி காலமானர்.
இதையடுத்து இன்று அவரது உடல் அடக்கம் செய்ய அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வழக்கமான இறுதி சடங்கினை அவரது உறவினர்கள் செய்தனர்.
இதன் பின்அகோரி மணிகண்டன் தனது தாயார் உடல் மீது அமர்ந்து மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார்.
அவருடன் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு முழங்க அகோரி பூஜை நடந்தது.
இதையடுத்து தாயாரின் உடலுக்கு தீபாராதனை செய்து அடக்கம் செய்தனர். இடுகாட்டில் நடந்த அகோரிகளின் விசித்திர பூஜையானது அப்பகுதியினரிடையே வியப்பை ஏற்படுத்தியதோடு, திகிலையும் உருவாக்கியுள்ளது.
Discussion about this post