பதினாறு மணி நேர மின்சாரத்தை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்தவர், விவசாய பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு என்று முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டினார். கோவை வையம்பாளையத்தில், விவசாய பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. மணி மண்டபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திகடவு அவினாசி திட்டத்தில், விடுபட்ட பகுதிகளுக்கு விரைவில் நிலத்தடி நீர் உயர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், பதினாறு மணி நேர மின்சாரத்தை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்தவர், விவசாய பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு என்று புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post