கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரை மாற்ற பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதையடுத்து, மத்திய குழு கோவா வந்துள்ளது.
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், கணைய பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் பாரிக்கரின் உடல்நலம் கருதியும் தற்போது நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் இருப்பதாலும், அவருக்கு பதிலாக புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய குழுவினர் கோவா வந்துள்ளதாகவும், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Discussion about this post