கோலியை அவரது மனைவியிடம் இருந்து பிரித்த பிசிசிஐ! 

வெளிநாட்டுத் தொடரில் மனைவியுடன் தங்க அனுமதிக்க வேண்டும் என்ற விராட் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மண்ணில் சாதனைகள் படைக்கும் இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் மண்ணை கவ்வும் நிலை உள்ளது. இதனால் கடுமையாக ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது.

சமீபத்தில் இங்கிலாந்தில் கிடைத்த தோல்வியால் இந்திய அணி மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. வீரர்கள் தங்கள் மனைவி, காதலியுடன் எடுக்கும் புகைப்படங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகின்றனர்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள், இப்படி பயிற்சி பெறாமல் குடும்பத்தோடு சுற்றினால் எப்படி வெற்றி பெற முடியும், சில மாதங்கள் பிரிந்து இருக்க முடியாதா? என ரசிகர்கள், நெட்டிசன்கள் வலைத்தளங்களில் விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது.

சமீபத்தில் பிசிசிஐ இதற்கு ஒரு புதிய விதியை அமல்படுத்தியது. அதில் வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாட செல்லும் வீரர்கள் 2 வாரம் வரை தங்கள் மனைவி, காதலியை தங்களுடன் தங்க வைக்கலாம் என்று உத்தரவிட்டது.

இதனிடையே இந்திய வீரர்கள் சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டிக்காக துபாய் சென்றனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கான வசதியை ஏற்படுத்திக்கொண்டதை வெளிநாட்டுப் பத்திரிகைகள் விமர்சித்தன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தனது வர்ணனையில், இந்திய அணியில் வீரர்களை விட சேவகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என விமர்சித்தார்.

அனைத்து வசதிகள் இருந்தும், அறிமுக அணியான ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணியிடமும் இந்தியா திணறியதை காண முடிந்தது.

உணர்வுபூர்வமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியிடம் தப்பித்தோம் பிழைதோம் என கடைசி பந்தில் போட்டியை டை செய்து கவுரவத்தை இந்திய அணி காப்பாற்றிக் கொண்டது.

வெற்றியை தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் இது போன்ற தோல்விகளை சகித்துக்கொள்வதில்லை. உடனே விமர்சிக்க தொடங்கி விடுகின்றனர்.

விமர்சனத்தின் முக்கிய அம்சம் வெளிநாடுகளுக்குச் செல்லும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாமல் மனிவியுடன் ஊர் சுற்றுகிறார்கள் என்பதுதான்.

வெற்றி பெற்றால் அது பெரிதாகாது. தோல்வியுற்றால் வறுத்தெடுத்து விடுவார்கள். இதையெல்லாம் ஆலோசித்துதான் பிசிசிஐ ஒரு முடிவுக்கு வந்தது.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய கோரிக்கை ஒன்றை பிசிசிஐ அதிகாரிகளுடன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் விளையாடப் போகும் முழு நாட்களும் தங்கள் மனைவி, குடும்பத்தாரை தங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த கோரிக்கை கோலியின் கோரிக்கை மட்டுமல்ல அணியினரின் கோரிக்கை, கேப்டன் என்கிற முறையில் அவர் பொதுவாக வைத்துள்ளார் என்கின்றனர்.

இதற்கு பிசிசிஐ-ன் உறுப்பினர் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு தான் முடிவெடுக்க முடியும் என்றும், இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கோலி மூட் அவுட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. 

 

Exit mobile version