கேரள வெள்ளத்திற்கு காரணம் தமிழகமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 142 அடிக்கு நீரை தேக்கியதும் காரணம் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் ஜாய் ரசூல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். முல்லை பெரியாறு அணையை வெளிநாட்டு பொறியாளர்கள் அடங்கிய ஆய்வு குழுவை வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜாய் ரசூல் தரப்பில் வாதாடப்பட்டது. அதேபோல் அணையின் நீர் மட்டம் 152 அடிக்கு நீரை தேக்கி வைக்கும் அளவிற்கு பலமாக உள்ளது என்று தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கும் கேரள அரசின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது. இதுகுறித்து அணை பாதுகாப்பு துணை குழு முடிவெடுக்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை 8 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

 

Exit mobile version