வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரளா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிலைகுலைந்து போயுள்ள அந்த மாநிலத்தில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தினர். இவற்றை நிவாரண பணிகளுக்கு தவிர வேறு பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. இதனை மீறி, நிதியமைச்சர் தாமஸ் ஐசக், பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் ஆகியோர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. நிவாரண முகாம்களுக்கு செல்ல ஹெலிகாப்டர்களை அவர்கள் பயன்படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post