மலையாள பத்திரிக்கையான தேசாபிமானியில் பணியாற்றும் மனோஜ் தனது மகளுக்கு நடைபெற இருந்த திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அதற்கு செலவாகும் தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்தார். இதற்கு மணமகன் வீட்டாரும் முழு சம்மதம் தெரிவித்தனர். இந்த நிகழ்வின் மூலம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் பத்திரிக்கையாளர் மனோஜ்.
கல்லூரி சீருடையில் மீன் விற்ற மாணவி ஹன்னான் ஹமீது, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து அவர் இந்த நிதியை அளித்தார். ஹனான் மீன் விற்பது போன்ற புகைப்படம் வைரல் ஆனதால், அவரது படிப்பு செலவிற்காக, பலரும் முன்வந்து அவரது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினர். இந்நிலையில் மக்கள் தனது நலனுக்காக அளித்த பணத்தை, மக்கள் நலனுக்காக திரும்பச் செலுத்துவதாக ஹனான் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அரிசி மூட்டைகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராஜமாணிக்கம், உமேஷ் ஆகியோர் சுமந்து அலுவலகத்தில் வைக்கும் புகைப்படம் வைரலானது. இதன்மூலம் அரசு அதிகாரிகளுக்கு முன்னுதாரமான 2 பேரும் செயல்பட்டதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம் மதுரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post