கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், வயநாடு, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆலப்புழா, கோட்டயம், வயநாடு ஆகிய மாவட்டங்கள் கனமழையால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடு இழந்த பொதுமக்கள், ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, 600 வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
Discussion about this post