கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அவசர அழைப்பு

கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்து, மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், கேரளாவை சீரமைக்க முதற்கட்ட நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார்.

முதற்கட்டமாக 600 கோடி ரூபாயை நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்தநிலையில், கேரளாவில் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசிக்க, அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு, அவசர அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், வெள்ள சேதங்கள் குறித்தும், கேரளாவை மறு சீரமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மத்திய அரசிடமிருந்து நிவாரணத் தொகையை இன்னும் கூடுதலாக கேட்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     

Exit mobile version