கேரளாவில் வரலாறு காணாத அளவு பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளால் பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்தை விரைந்து சரிசெய்யும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த முயற்சிகளில் ஒன்றாக மாநில ஜிஎஸ்டி வரியில் கூடுதலாக 10 சதவிகிதம் வரி விதிக்க அனுமதிக்குமாறு அருண் ஜேட்லியிடம் கேரள அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கையை பரிசீலிக்க 7 அமைச்சர்கள் கொண்ட குழுவை ஜேட்லி நியமித்துள்ளார்.
Discussion about this post