ஆகஸ்ட் 15ஆம் தேதி வளசரவாக்கம் அருகே கழிவு நீர் தொட்டியில் இருந்து ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தை, மருத்துவர்களின்கண்காணிப்பில் உடல் நலத்துடன் உள்ளது.
தாய் பால் வங்கி மூலமாக உணவு அளிக்கப்பட்டு முழு நலம் பெற்றுள்ள சுதந்திரம் என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தை சமூக நலத்துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்தக் குழந்தையை சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவிடம்ஒப்படைத்தார்.
கலைச்செல்வி காருண்யா தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் சுதந்திரம், மறைந்த முதலமைச்சர்ஜெயலலிதாவாரல் கொண்டு வரப்பட்ட குழந்தை தொட்டில் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட உள்ளார்.
அவரின் பராமரிப்பிற்காக மாதம் 2 ஆயிரத்து 165 ரூபாயைத் தமிழக அரசு வழங்க இருக்கிறது.