அரூர் நகர பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மாவேரிப்பட்டியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்தநிலையில், குப்பை கிடங்கால், உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக மாவேரிப்பட்டி, உடையானூர் மற்றும் மாவேரிப்பட்டி புதூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். மாவேரிப்பட்டி ஏரி, கல் ஏரி உள்ளிட்ட மூன்று ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாயில், குப்பைக் கிடங்கு கழிவுகள் கொட்டப்படுவதால், மாவேரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடைவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தநீரை பயன்படுத்தும் மக்கள் உடல்ரீதியான பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன்கருதி குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குப்பைக் கிடங்கை மாற்ற கோரிக்கை
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: தருமபுரி மாவட்டம்
Related Content
தருமபுரியில் 4.97 கோடி ரூபாய் செலவில் பத்து ஏரிகளை புனரமைக்கும் பணிகள்
By
Web Team
July 30, 2019