கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த டி.என்.பாளையம் வனப்பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இதன்மூலம், 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முழு கொள்ளளவான 42 அடியை நீர்மட்டம் எட்டியுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி வினாடிக்கு ஆயிரத்து 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குண்டேரிப்பள்ளம் அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் 4 வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாத்தகோட்டா, ராமாபுரம், குக்கலப்பள்ளி, திருமலக்கோட்டா, பன்னப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post