கேரளாவில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் கடுமையான அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து, சேதமடைந்துள்ளன. தற்போது நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளநிலையில், முகாம்களில் தங்கயிருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில், மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளின் சீரமைப்பு பணிகளுக்காக பெண்களை தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புவோருக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post