இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக். உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.
Discussion about this post