நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து ஆலோசிக்க கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கர்நாடகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்துக்கட்சி எம்.பி.க்களுக்கும் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள செல்போன் பரிசாக வழங்கப்பட்டது. இவ்விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செல்போன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், செல்போன் வழங்கப்பட்டு இருப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே, கர்நாடக எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை தாம் வழங்கியதாக, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் தன்னுடைய சொந்த செலவில் எம்.பி.க் களுக்கு செல்போனை பரிசாக வழங்கியதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post