கர்நாடகாவில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்ததின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, முதலமைச்சர் குமாரசாமி, வெள்ள சேத பாதிப்புகளை ஆய்வு செய்து, மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரண நிதி தரவேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தநிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடகு மாவட்ட பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், வெள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

Exit mobile version