சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றார். இதுதொடர்பாக மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார், சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அவர் கூறினார். எந்தெந்த இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் தேவையோ அந்த இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் செய்ய வேண்டிய பொதுப்பணித்துறை சார்பான திட்டங்களுக்காக ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளபட்டும் என அவர் குறிப்பிட்டார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை திமுக தரப்பில் இருந்து கேட்கவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, மருத்துவ உதவி கேட்டால் செய்து கொடுக்க தமிழக அரசு தயார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
Discussion about this post