கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணத்தால் பேச்சிப்பாறை , பெருஞ்சாணி , சிற்றாறு அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தாமிரபரணி , கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாங்காடு , பள்ளிகல் , வைக்கலூர் பகுதிகளில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர்கள், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

 

 

Exit mobile version