கட்டாய முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மக்களவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில், மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநிலங்களவையில் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்பட உள்ளது.
தற்போது கொண்டுவந்துள்ள முத்தலாக் தடை சட்டத்தில் 3 திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. அவை குற்றஞ்சாட்டப்பட்டவர் உடனடியாக ஜாமின் பெற முடியாது என்பதை மாற்றி நீதிமன்றத்தின் மூலம் ஜாமின் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்படும் பட்சத்தில் அபராதம் செலுத்தி சேர்ந்து வாழலாம், கணவன் மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Discussion about this post