கபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கபினி அணையில் இருந்து அதிகளவு உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்து. இந்நிலையில் தொடர் மழை காரணமாக திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருக்கிறது. திறக்கப்பட்ட நீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கலுக்கு காவிரி நீர் வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்படும் என்பதால் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.