ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரஸ் (antonio guterres) வரும் 1ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், எல்லையில் இந்திய வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் காரணமாகவும், இரு நாடுகளுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் அறிவித்தார். இந்தநிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்டரஸ் (antonio guterres)வரும் 1ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்டோனியோவின் இந்திய வருகையின் போது, இருநாடுகளிடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.