அமெரிக்கர்கள் உள்ளிட்ட 700 பேரை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர். கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி சிரியாவின் டேர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள அகதிகள் முகாமை தாக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுமார் 700 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட 700 பேர் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், நாளுக்கு 10 பேர் வீதம் அவர்கள் கொல்லப்பட இருப்பதாக தமக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்து இருப்பதாகவும் புதின் கூறியுள்ளார். இது பயங்கரமானது என்றும், பேரழிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடத்தப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ளதாக சிரியாவில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு உறுதி செய்துள்ளது.
Discussion about this post