மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஐஸ்கிரீம்களை தயாரிக்க வேண்டும் என்று, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் உள்ள வர்த்தக மையத்தில், ஐஸ்கிரீம் பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி இந்தக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், தமிழ் இனிமையான மொழி என புகழாரம் சூட்டினார். ஐஸ்கிரீம் அனைத்து வயதினராலும் விரும்பப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், ஒருவயது குழந்தை முதல் 90 வயது நபர் வரை அனைவரும் ஐஸ்கிரீமை விரும்புவதாக தெரிவித்தார். ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள் மக்களின் நலனை கருதி ஐஸ் கிரீம் தயாரிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார். 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஐஸ்கிரீம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள், குளிர்சாதன பெட்டிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
Discussion about this post