சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த பாலமலையில் அரிய வகை விலங்கான எறும்புத்தின்னியை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேட்டூரை அடுத்த கொளத்தூரை ஒட்டி அmமைந்துள்ள பாலமலை அடிவாரத்தில் மேட்டூர் வன சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வன அலுவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வனப்பகுதியில் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பாலமலை ராமன் பட்டியைக் சேர்ந்த மாதப்பன் ,மூலப் பனங்காட்டைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் மேலும், நடத்தப்பட்ட விசாரணையில், 5 கிலோ எடை கொண்ட அரிய வகை விலங்கான எறும்புத்தின்னியை வேட்டையாடி அவற்றை மூட்டையில் வைத்திருந்து கண்டபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்து மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Discussion about this post