எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த, மேலும் 53 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள் தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக, புழல் சிறையிலிருந்து கடந்த ஜூன் 6ஆம் தேதி 67 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் ஜூன் 12ஆம் தேதி 52 கைதிகளும், ஜூன் 20ஆம் தேதி 47 கைதிகளும் அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டனர். தற்போது, 7வது கட்டமாக திருச்சி மத்திய சிறையில் இருந்து 53 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்காக அதிகாலையிலேயே சிறைக்கு வந்த உறவினர்கள், கைதிகள் விடுதலை ஆனதும், அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே, கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.