எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா – 32 ஆயுள் கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் இருந்து 3 பெண்கள் உட்பட 32 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வேலூர் சிறையில் இருந்து 63 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version