இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டி உள்ளது. இது சாமான்ய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, திங்கட்கிழமை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் 25 மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்பும் இல்லை. வாகனங்கள் வழக்கம் போன்று இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கடைகளும் திறந்துள்ளன. முழு அடைப்புக்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காததால், மேற்கு வங்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை. மகாராஷ்டிராவிலும் சிவசேனா ஆதரவு அளிக்காததால், போராட்டம் பிசுபிசுத்துள்ளது.
Discussion about this post