வெப்பச் சலனம் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Discussion about this post