அரபிக்கடல் முதல் இலங்கை வரை மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
உள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.