தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் டெல்லி சென்றுள்ளனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவர்கள் இன்று சந்தித்து பேசினர். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18ம் ஆண்டுக்கான, 2வது தவணையாக ஆயிரத்து 390 கோடியே 14 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்ததற்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். நிலுவையில் உள்ள தொகையை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பின் போது, அதிமுக எம்பிக்கள் டாக்டர். பி. வேணுகோபால், சி. மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Discussion about this post