உலக விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் வகையில் இந்திய விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் உள்ளதாக, ஆளுநர் பன்வரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உலக விண்வெளி வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித், உலகளவில் விண்வெளி சாதனைகளில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பங்கு சிறப்பாக உள்ளதாக கூறினார்.
இந்திய விஞ்ஞானிகள் பெரிய அளவில் சாதித்து வருவதாகவும், அவர்களின் செயல்பாடு உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்து இருப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்த ஆளுநர், மாணவர்கள் மீது அவர் பேரன்பு கொண்டிருந்ததை சுட்டிக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ISRO இயக்குநர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post