தொழில் துறையில் இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னிலை மாநிலமாக திகழச் செய்ய, 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட இருப்பதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் முதல் மாநாட்டு வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு 2வது மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் இந்த மாநாட்டை நடத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ள அமைச்சர் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
சியட் டயர் தயாரிப்பு நிறுவனம் 4 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய முன்வந்து இருப்பது முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post