நுண்வழி சிகிச்சை துறையால் நடத்தப்படும் தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியினை சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர்,சுதாகார நலத்திட்டத்தில் தமிழகம் உலக அளவில் முன்னோடியாக திகழ்கிறது என தெரிவித்தார். மேலும், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக உறுவாக்க, 346 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும், ஏடிஎஸ் கொசுக்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிய மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், இளம் தலைமுறை மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் மருத்துவ சேவை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post