உயிருக்கு உத்திரவாதமில்லை- தனுஸ்ரீ தத்தா வேதனை

 

இந்தியாவில், அநீதிக்கும் அவமானத்துக்கும் எதிராகப் பேசினால் உயிருக்கு உத்திரவாதமில்லை என நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்தார். திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அண்மையில் பரபரப்புப் புகார் கூறினார்.

அத்துடன் 2005-ல் ‘சாக்லேட்’ படப்பிடிப்பின்போது திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான விவேக் அக்னிஹோத்ரியும் தன்னிடம் தவறான வகையில் நடந்துகொள்ள முயன்றதாக தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் நானா படேகர் மற்றும் விவேக் அக்னிஹோத்ரி ஆகிய இருவரும் தனுஸ்ரீ தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தனுஸ்ரீ தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அநீதிக்கும், துன்புறுத்தலுக்கும், அவமானத்துக்கும் எதிராகப் பேசினால் கிடைக்கும் பரிசு இதுதான் என கூறியுள்ளார். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தன்னை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தன்னுடைய வீட்டுக்குள் அந்நியர்கள் நுழைய முயற்சிப்பதகவும் கூறியுள்ளார். தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் தனுஸ்ரீ தத்தா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version