உயர் கல்வி மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் + 2 வகுப்பில் 600 என்ற அளவில் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், + 1, + 2 ஆகிய இருவகுப்புகளிலும் தலா 600 மதிப்பெண்கள் வீதம் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்தார். இரு வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ் இனி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். பாடங்கள் கடினமாக இருப்பதாகவும், மன அழுத்தம் ஏற்படுவதாகவும் மாணவர்கள் கூறியதையடுத்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். இந்த மதிப்பெண் முறை இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Discussion about this post