பெட்ரோல் விலை இன்றும் புதிய உச்சத்தை எட்டி இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து 85 ரூபாய் 69 காசுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி, ஒரு லிட்டர் 78 ரூபாய் 10 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
டீசல் விலையேற்றத்தால் சரக்கு கட்டணத்தை உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.